மகளிர்மணி

பாஸ்தா மினி கொழுக்கட்டை

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு பாஸ்தாவை அதில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

கவிதா சரவணன்

தேவையான பொருட்கள்: 

சத்துமாவு - ஒரு கிண்ணம் (கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்)
பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கிண்ணம் 
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி 
தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம் 
பச்சைப் பட்டாணி - கால் கிண்ணம் 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை  - ஒரு மேசைக்கரண்டி 
வெள்ளை மிளகுத்தூள் - தேக்கரண்டி எண்ணெய் - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு பாஸ்தாவை அதில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் 2 கப் நீர் ஊற்றி, கொதி வந்ததும் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சத்துமாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு கைவிடாமல் கிளறி இறக்கி, கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும், வெங்காயத்தை வதக்கி, பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லித் தழை தூவி வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துப்புரட்டி, வெந்த பாஸ்தாவையும் சேர்க்கவும். ரெடியாக இருக்கும் கொழுக்கட்டையை இதனுடன் சேர்த்துக் கிளறி, பரிமாறவும். வித்தியாசமான, சுவையான, இந்த கொழுக்கட்டையை  குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT