மிளகாய்  
மகளிர்மணி

உணவுப் பொருள்களில் பூச்சி வராமல் இருக்க..!

உணவுப் பொருள்களில் பூச்சிகள் வராமல் இருக்க சில ஆலோசனைகள்.

ஏ.எஸ். கோவிந்தராஜன்

உணவுப் பொருள்களில் பூச்சிகள் வராமல் இருக்க சில ஆலோசனைகள்:

பருப்பு வகைகளில் பெருங்காயத்தைத் தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால், வண்டு பிடிக்காது.

உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால், மாவு மாதிரியான பொருள்கள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டுகள் வராது,

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சிகள் வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும், வசம்புத் துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுத்தம் பருப்பு எனில், மஞ்சள் தூளில், உப்பும் கலந்து வைக்கலாம்.

மிளகாய் பொடியில் வண்டுகள் வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்ப் பொடி டப்பாலில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத் தூள் கலந்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிகள் கூடுகள் பிடிக்காது.

மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில்போட்டு முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலையைப் போடலாம். கசக்காது, புழு பூச்சிகள் வராது. சுக்குத் தூளும் தூவலாம்.

புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும் நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமல் இருக்கும்.

சர்க்கரை, இனிப்பு வகைகளில் எறும்பு வராமல் இருக்க, கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைக்கலாம்.

எள்டப்பாலில் சிறிது நெல்லைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் பாவை.. ராஷ்மிகா மந்தனா!

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT