மீல்மேக்கர் கீர்
கொதிக்கும் நீரில் மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
தேவையான பொருள்கள்:
மீல்மேக்கர் உருண்டைகள்- 30
பால்- ஒரு லிட்டர்
Advertisement
சர்க்கரை ஒன்றரை கிண்ணம்
ரோஸ் வாட்டர்ஒரு தேக்கரண்டி
நெய் 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை சிறிதளவு.
செய்முறை:
கொதிக்கும் நீரில் மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி, பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி துருவலாக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீல்மேக்கர் துருவலை நன்கு வதக்கவும். காய்ச்சிய பாலில் மீல்மேக்கர் துருவலைச் சேர்த்து, குறைந்த தீயில் வேகவிடவும். 20 நிமிடங்கள் கழித்து, சர்க்கரையைச் சேர்த்து கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது, முந்திரி, திராட்சை, ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். இதை குளிர வைத்தும் பரிமாறலாம்.