முகப்பு
மகளிர்மணி

பார்லி பருப்பு பாயசம்

பார்லியை 6 8 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் குக்கரில் பாசிப்பருப்புடன் சேர்த்து வேகவிடவும்.

Updated On : 31 ஆகஸ்ட், 2024 at 6:30 PM
பார்லி பருப்பு பாயசம்
பகிர்:

தேவையானவை: 

பார்லி ஒரு கிண்ணம்

பாசிப்பருப்பு கால் கிண்ணம்

வெல்லம் ஒன்றரை கிண்ணம்

ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி தலா ஒரு தேக்கரண்டி

நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தேவையான அளவு

செய்முறை: 

பார்லியை 6 8 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் குக்கரில் பாசிப்பருப்புடன் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் சிறிது மசித்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, வெந்த பார்லி, பாசிப்பருப்புடன் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். விருப்பப்பட்டால் காய்ச்சி, ஆற வைத்த ஒரு டம்ளர் பால் சேர்க்கலாம். அல்லது ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.