மகளிர்மணி

கொள்ளு சூப்

கொள்ளை முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் மூன்று கிண்ணம் தண்ணீரை சேர்த்து குக்கரில்வேகவிடவும். பிறகு தண்ணீரில் வடித்து எடுக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

கொள்ளு- அரை கிண்ணம்

தக்காளி- 3

எலுமிச்சைப் பழச்சாறு- அரை தேக்கரண்டி

மல்லித் தழை- சிறிது

உப்பு- தேவையான அளவு

நெய்- 2 தேக்கரண்டி

அரைக்க: மிளகு, சீரகம்- 1 தேக்கரண்டி

பூண்டு- 2 பல்

கறிவேப்பிலை- சிறிது

செய்முறை:

கொள்ளை முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் மூன்று கிண்ணம் தண்ணீரை சேர்த்து குக்கரில்வேகவிடவும். பிறகு தண்ணீரில் வடித்து எடுக்கவும். மிளகு, சீரகத்தை மைய அரைத்து, பூணடு, கறிவேப்பிலை சேர்த்து தட்டியெடுக்கவும். நெய்யை காயவைத்து பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

அத்துடன் சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் மூன்று நிமிடங்கள் வதக்கவும். கொள்ளு வேக வைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி எலுமிச்சம் பழச்சாறு, மல்லித்தழையை சேர்த்து பரிமாறுங்கள்.

கோ.மஞ்சரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT