பாகவதரும் சுப்புலட்சுமியும்...!
எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் ஜோடி போல், பாகவதர் எஸ்.டி.சுப்புலட்சுமியும் அந்தக் காலத்தில் பிரபலமான ஜோடியாகத் திகழ்ந்தனர்.
எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள் ஜோடி போல், பாகவதர் எஸ்.டி.சுப்புலட்சுமியும் அந்தக் காலத்தில் பிரபலமான ஜோடியாகத் திகழ்ந்தனர்.
பாகவதரோடு பல நாடகங்கள், முதல் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்து வெற்றி ஜோடி என நாடகம், திரையுலகில் புகழ் பெற்றனர். பவளக்கொடி, நவீன சாரங்கதாரா ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே வசூல், புகழில் பெருமளவு பேசப்பட்டன.
சினிமா பியூட்டி, முல்லைச் சிரிப்பழகி என்று கொண்டாடப்பட்டவர் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு. நார்ட்டன் சுப்புலட்சுமி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அந்தக் காலத்தில், நார்ட்டன் என்ற ஆங்கிலேய வழக்குரைஞர் ஒருவர் வாதத் திறமையும், குறுக்கு விசாரணை செய்யும் சமார்த்தியமும் படைத்தவர். எதிரணியில் உள்ள வழக்குரைஞரை திணற அடிப்பார். அப்படிப்பட்ட திறமை நடிகைகளில் எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு இருந்ததால்தான் சிறப்புப் பெயர்.
1935இல் வெளிவந்த படங்களில் சிறந்ததாக நவீன சாரங்கதாராவும், சிறந்த நடிகராக பாகவதரும், சிறந்த நடிகையாக எஸ்.டி.சுப்புலட்சுமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.