மகளிர்மணி

முடக்கற்றான் ரசம்

முடக்கற்றான் கீரையை சுத்தம் செய்து அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

லோ. சித்ரா

தேவையான பொருள்கள்:

முடக்கற்றான் கீரை- 1 கைப்பிடி அளவு
துவரம் பருப்பு- 2 தேக்கரண்டி
சீரகம்- அரை தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
தக்காளி- 1
புளி- சிறிதளவு
பூண்டு- 4 பல்
கொத்தமல்லி விதை- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
உப்பு, மஞ்சள் தூள்- தேவையான அளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்- 2
கொத்தமல்லி இலை- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை: 

முடக்கற்றான் கீரையை சுத்தம் செய்து அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின்னர், அதை வடிகட்டி அந்தத் தண்ணீருடன் சிறிதளவு புளித் தண்ணீர், மஞ்சள் தூள், தக்காளி,பெருங்காயம், உப்பு சேர்த்து வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி விதை ஆகியவற்றை ஒன்று இரண்டாக மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும், அதில், நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவவும்,. சுவையான ரசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT