மகளிர்மணி

எலுமிச்சை இலை இட்லிப் பொடி

DIN

தேவையான பொருள்கள்:

எலுமிச்சை இலை - ஒரு கிண்ணம்
கடலைப் பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
பெருங்காய் துண்டு - 3
பூண்டு - 8 பல்
காய்ந்தமல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி 
மிளகு - கால் தேக்கரண்டியில் பாதி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் எலுமிச்சை இலையை  வறுக்கவும். கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம், மல்லி, சீரகம், மிளகு எடுத்து தனித்தனியே வறுத்துகொள்ளவும். மிக்ஸியில் முதலில் மிளகாய், எலுமிச்சை இலையை சேர்த்து பொடி செய்ய வேண்டும். அடுத்து கடலைப் பருப்பு, மல்லியை பொடி செய்ய வேண்டும். கடைசியாக, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து பொடி செய்ய வேண்டும். 

கலந்த பொடியை சாதத்தில் போட்டு, எலுமிச்சை சாறு, நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். பொடியை நெய்யில் விட்டு குழைந்து சாப்பிட்டால் சுவை கூடும். இட்லிக்கு உகந்த பொடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

SCROLL FOR NEXT