மகளிர்மணி

கோபி மஞ்சூரியன்

சுவையான கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி?

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள் :

காலிஃப்ளவர்- 1

மைதா மாவு - 2 மேசைக்கரண்டி

கார்ன்ப்ளார், தனியா தூள்- தலா ஒரு மேசைக்கரண்டி

குடை மிளகாய்- 1

மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது- தலா ஒரு தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 3 மேசைக் கரண்டி

வெங்காயம்- 2

மிளகாய் தூள்- 1 மேசைக்கரண்டி

பூண்டு பல்- 8

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை :

பூண்டு, காலிஃப்ளவரை சிறுசிறுத் துண்டுகளாகவும், வெங்காயம், குடைமிளகாயை பொடியாகவும் நறுக்கவும். ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சுடு தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் மைதாமாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசையவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். நிறம் மாறியதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு போட்டு வதக்கி விட்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிவிட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு வாசனை அடங்கி, குடைமிளகாய், வெங்காயம் வதங்கியதும் தக்காளிசாஸ் ஊற்றி தனியா தூள் போட்டு கால் கிண்ணம் தண்ணீரை ஊற்றி கிளறி விடவும்.

5 நிமிடங்கள் கழித்து பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர், 3 அல்லது 5 நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்துவிடவும். சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குணசீலத்தில் தேரோட்டம்!

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT