தேவையான பொருள்கள்
பிரியாணி அரிசி , புழுங்கல் அரிசி- தலா அரை கிண்ணம்
சாதம்- 1 கைப்பிடி
தேங்காய் துருவல்- முக்கால் கிண்ணம்
வெல்லப் பாகு - முக்கால் கிண்ணம் (தண்ணீர் குறைத்து காய்ச்சியது)
சோம்பு- 6
ஏலக்காய்- 2
பேகிங் பவுடர்- 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 15
தேங்காய் கொத்து - அரை கிண்ணம்
தேங்காய் எண்ணெய்- 3 மேசைக் கரண்டி
செய்முறை:
முதலில் அரிசிகளை ஊறவைத்து வடித்து மிக்ஸியில் சேர்த்து சாதம், தேங்காய் துருவல், ஏலக்காய், சீரகம், சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும். பிறகு அதனுடன் வெல்லப்பாகு, பேகிங் பவுடர் கலக்கவும். ஒரு பரந்த அடிகனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் காய வைத்து, அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் கொத்து சேர்த்து வதக்கவும்.• பொன்னிறமானதும் அதன் மேல் அரைத்த கலவையை ஊற்றவும். இப்பொழுது வதக்கிய வெங்காயம் சேர்க்கவும். மூடி போட்டு தீயை 5 நிமிடம் மிதமானதாக வைத்து, பின்னர் தீயை நன்கு குறைத்து 35 நிமிடம் வேக விடவும். வெந்திருக்கிறதா என்று திறந்து ஒரு குச்சியால் குத்திப் பார்த்து தீயை அணைத்து விடவும்.
சூடோடு சிறிது ஒட்டுவது போல தோன்றினாலும் சூடு ஆறினால் ஒட்டவே ஒட்டாது. சூடு ஆறியதும் வேறு பாத்திரத்துக்கு கவிழ்த்து துண்டுகள் போட்டு பரிமாறவும். வெங்காயத்தின் மணத்தோடு அருமையான இனிப்பு ரெடிய இதனை குக்கரில் ஊற்றி வெயிட் போடாமல் வைத்தும் சமைக்கலாம்.
டோஸ்டர் அவனில் வைத்து சமைத்தாலும் இருபுறமும் சூடேறுவதால் இன்னும் நன்றாக வரும்.
மூடி வைத்து மேலே தம் போட முடிந்தாலும் நன்றாக வரும். மேற்புறம் வேக நேரமெடுத்தால் திருப்பி போடலாம். மேலே வாழையிலையை வைத்து அதன் மேல் கணலிட்டு தம் போட்டு செய்ய இதன் சுவை நாக்கில் இருந்து போகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.