நானஹத்தா 
மகளிர்மணி

நானஹத்தா

சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய், சர்க்கரை, சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

பாத்திமா பீ

தேவையான பொருள்கள்

மைதா - ஒரு கிண்ணம்

நெய் - 100 கிராம்

சர்க்கரை - முக்கால் கிண்ணம்

சமையல் சோடா, உப்பு - சிறிதளவு

செய்முறை:

சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய், சர்க்கரை, சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். அதில் மைதா மாவை சேர்த்து கட்டியில்லாமல் பிசையவும். மாவை அடித்து பிசையாமல் தேய்த்து பிசையவும். மாவை கையால் கால் இஞ்ச் அளவுக்குத் தட்டிக் கொள்ளவும். சிறு அச்சுகளால் தட்டிய மாவை விரும்பிய வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.

நெய் தடவிய பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள நானஹத்தாவை சிறிது இடைவெளிவிட்டு அடுக்கவும். குக்கர் தட்டை குக்கரில் வைத்து அதன் மேல் நானஹத்தா வைத்துள்ள பாத்திரத்தை வைக்கவும். கேஸ்கட், வெயிட் போடாமல் குக்கரை மூடி சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும். இடையில் வேண்டுமானால் திறந்து பார்க்கலாம்.

நானஹத்தா வெள்ளையாக இருக்க வேண்டும். மேலே லேசாக வெடிப்புகள் இருக்கும் சிறிய தோசை திருப்பியால் மெதுவாக எடுக்கவும். சுவையான நானஹத்தா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

"ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயம்தானா?' என்ற கேள்வி குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மக்களாட்சியின் தாய் இந்தியா!

SCROLL FOR NEXT