ரவை வடாம்
Updated On : 1 ஜூன், 2024 at 9:58 PM
தேவையான பொருள்கள்:
ரவை- 1 கிலோ
பச்சை மிளகாய்- 20
Advertisement
உப்பு, தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை:
இரண்டு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு நீர் எடுத்துகொள்ள வேண்டும். நீரைக் கொதிக்க வைத்து, அதில் ரவையைப் போட்டு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். ருசிக்கு ஏற்ப உப்பு, பச்சை மிளகாயை அரைத்து கலந்துகொள்ள வேண்டும். விருப்பத்துக்கேற்ப எலுமிச்சைப் பழம் பிழிந்துகொள்ள வேண்டும். தயாரித்த கூழை தேன் குழல் அச்சில் போட்டு நீளவாக்கில் பிழிந்து உலர வைத்து எடுத்துகொள்ள வேண்டும். பொரித்து உண்ண சுவையான வடாம் இது.