வறட்சி மட்டுமின்றி அதிகமான எண்ணெய் பசை கூட முக அழகை கெடுத்துவிடும். முட்டையின் வெண்கருவுடன் சிறிது தேனும், எலுமிச்சைப் பழச் சாறும் கலந்து முகத்தில் பூசி முப்பது நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் இளம் சூடான நீரில் கழுவ வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரை முகத்தில் வடிக்க எண்ணெய் பசை நீங்கும்.
பாதாம் பருப்பை பால் சேர்த்து அரைத்து இரவில் தொடர்ந்து முகம், கைகளில் தடவி வந்தால் நிறம் நன்கு கூடும்.
தயிரின் மேல் படிந்துள்ள ஆடையைச் சிதையாமல் மெல்ல எடுத்து முகத்தில் அப்படியே பற்றுப் போட்டது போன்று வைத்து முப்பது நிமிடங்கள் கழித்து, முகத்தைக் கழுவினால் முகம் மினுமினுப்பாக இருக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், உருளைக் கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகளில் தேய்த்து வந்தால், அவை தானாக மறைந்துவிடும்.
வெள்ளரிச் சாறை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தடவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.