மில்க் புட்டிங்
பாரம்பரிய சுவையில் மில்க் புட்டிங்
தேவையான பொருள்கள்:
பால் 1 கிண்ணம்
சர்க்கரை 5 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி சிறிதளவு
பாதாம், பிஸ்தா 10 கிராம்
செய்முறை:
முதலில் பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கவும். சர்க்கரையை பொடி செய்துகொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும். முட்டையை நன்கு கலக்கி கொள்ளவும். பொடி செய்ய சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடியைச் சேர்த்து அதனை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும்.
பின்னர், 15 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். வேக வைத்த பிறகு இறக்கி அதில் பிஸ்தா, பாதாமை தூவி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும். இப்போது சூப்பரான மில்க் புட்டிங் ரெடி.