வெற்றிலை 
மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

பசி எடுக்கும்போது மனிதர்களின் குடலில் ஒரு அமிலம் சுரக்கும்.

பிரபா

பசி எடுக்கும்போது மனிதர்களின் குடலில் ஒரு அமிலம் சுரக்கும். அப்போது உணவு எதுவும் கொடுக்காமல் இருந்தால், அந்த அமிலம் நெஞ்செரிச்சலாக மாறி தொல்லை கொடுக்கும். இந்த நெஞ்செரிச்சலைக் குணமாக்க ஆப்பிள் பழம் உண்ணலாம். தண்ணீர் அதிகம் குடிக்கலாம், கடல் உணவுகள் எடுக்கலாம், வாழைப்பழம், பால், அதிமதுரம் ஆகியன நல்ல பலன் கொடுக்கும்.

எண்ணெய், காரம் இல்லாத உணவு சாப்பிடலாம். மேலும் சிப்ஸ், மசாலா, சாக்லேட் சாப்பிடக் கூடாது.

நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் குறையும்.

அஜீரண பிரச்னைக்கு முதல் நாள் இரவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். அதிகாலையில் எழுந்ததும் அந்த வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்து வர குணமாகும். வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் எந்த விதமான உடல்நலக் கோளாறுகள் வராது.

கொய்யாவில் மூல நோயை குணமாக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. எனவே, மூல நோய் வராமல் இருக்க இரவு உணவுக்கு பின் நன்கு பழுத்த கொய்யா பழத்தை சாப்பிடலாம்.

வெற்றிலையில் கால்சியம் அதிகமாக இருப்பதால் நம் எலும்புகளை பாதுகாக்கும், அசிடிட்டியைத் தடுக்கும். செரிமானம், மலச் சிக்கல் நீங்கும், கொழுப்புகளை கரைக்கும். ஒரு வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து சாப்பிட வேண்டும், இப்படி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

SCROLL FOR NEXT