சதகுப்பை ரசம்
புளி, தாளிப்பு தவிர பாக்கி பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும்.
கே. நாகலட்சுமி
தேவையான பொருள்கள்:
சதகுப்பை - 2 தேக்கரண்டி
Advertisement
Advertisement
துவரம் பருப்பு - 3 தேக்கரண்டி
மிளகு, சீரகம் - தலா ஒரு மேஜை கரண்டி
வரமிளகாய் - 1
புளி - நெல்லிக்காயளவு
கண்டதிப்பிலி - 3 குச்சி
உப்பு - திட்டமாக
தாளிக்க:
நெய் - ஒரு மேஜை கரண்டி
கடுகு - ஒரு மேஜை கரண்டி
கறிவேப்பிலை - 5 ஆர்க்குகள்
செய்முறை:
புளி, தாளிப்பு தவிர பாக்கி பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியைக் கரைத்துவிட்டு உப்பும், கால் மேஜை கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து ஒரு கொதிவிடவும். பின் பொடியைப் போட்டு மேலும் ஒரு கொதிவிட்டு, பின் ரசத்தை விளாவி, நுரைத்து வந்ததும் இறக்கி, நெய்யில் தாளிக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.