முகப்பு
மகளிர்மணி

தானத்திலும் கோடீஸ்வரி..!

உலகில் முன்னணி கோடீஸ்வரியும், நாவல் ஆசிரியருமான மெக்கன்சி ஸ்காட், இதுவரை ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார்.

Updated On : 10 நவம்பர், 2024 at 2:04 PM
நாவல் ஆசிரியருமான மெக்கன்சி ஸ்காட் - Picasa
பகிர்:

உலகில் முன்னணி கோடீஸ்வரியும், நாவல் ஆசிரியருமான மெக்கன்சி ஸ்காட், இதுவரை ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். தனது சொத்தில் பாதியை நன்கொடையாகவும் வழங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

மெக்கன்சி ஸ்காட்டின் கணவர் அமேஸான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெசோஸ். நியூயார்கில் பணியாற்றும்போது பெசோஸை சந்தித்த மெக்கன்சி 1993-இல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சியாட்டிலுக்கு இடம்பெயர முடிவு செய்து, அமேஸான் நிறுவனத்தையும் தொடங்கினர்.

ஜெஃப் பெசோஸிடமிருந்து விவாகரத்து பெற்ற மெக்கன்சி ரூ 1.30 லட்சம் கோடி மதிப்புள்ள அமேஸான் நிறுவனப் பங்குகளைப் பெற்றார். அதனால் ஒரே நாளில் உலகின் முன்னணி கோடீஸ்வரியானார். ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அடிப்படையில், ஸ்காட்டின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 1,55,000 கோடியாம். 2019 -இல் தனது சொத்தில்

Advertisement

பாதியையாவது நன்கொடையாக வழங்கத் தீர்மானித்திருப்பதாக மெக்கன்சி அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.