பருப்பு லட்டு
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரிசிப் பொரி சேர்த்து பொடி செய்ய வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும்.
தேவையான பொருள்கள்:
பொரிகடலை பருப்பு, வேர்க்கடலை பருப்பு, எள், நெய்- தலா 200 கிராம்
கோதுமை மாவு, ராகி மாவு- தலா 250 கிராம்
Advertisement
Advertisement
அரிசிப் பொரி- 50 கிராம்
முந்திரிப் பருப்பு- 20
ஏலக்காய்- 4
வெல்லம்- 400 கிராம்
செய்முறை:
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து அரிசிப் பொரி சேர்த்து பொடி செய்ய வேண்டும். ஏலக்காயை பொடி செய்ய வேண்டும். முந்திரிப் பருப்புகளை மெல்லிய துண்டுகளாக்கி பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
வாணலியில் நெய் முழுவதையும் விட்டு கோதுமை மாவு, ராகி மாவு சேர்த்து வாசனை வரும்வரை வறுக்க வேண்டும். பிறகு பொடித்துவைத்திருக்கும் பொடி சேர்த்து கிளறி விட்டு பொடி செய்த வெல்லத்தைப் போட்டு கிளற வேண்டும். ஏலப்பொடி, முந்திரிப் பருப்புத் துண்டுகள் போட்டு கலந்து இறக்கி உருண்டைகளைப் பிடிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.