முள்ளங்கி 
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

பாலக்கீரையில் இலைகள் கொத்தாக இருக்க வேண்டும். எங்கும் இலைகளில் ஓட்டை இருக்கக் கூடாது. அதன் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

செளமியா சுப்ரமணியன்

 பாலக்கீரையில் இலைகள் கொத்தாக இருக்க வேண்டும். எங்கும் இலைகளில் ஓட்டை இருக்கக் கூடாது. அதன் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.

 முள்ளங்கி நீண்டு, தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.

 தேங்காயைப் போல், மாங்காயை காதருகே வைத்து தட்டிப் பார்க்க வேண்டும். அவ்வாறு தட்டிப்பார்க்கும்போது சத்தம் வந்தால் அந்த மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும், சதைப்பகுதி நிறைந்திருக்கும்.

 பீர்க்கங்காய் பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருப்பதையும், அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றல் என்று அர்த்தம்.

 உருளைக்கிழங்கு தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் இருந்தாலோ தவிர்க்கவும். தோல் சுருங்கியவற்றையும் வாங்கக்கூடாது. விரல் நகத்தினால் கீறினால் தோல் வரவேண்டும். உருளைக்கிழங்கு சைஸ் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

 அவரைக்காய் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்து , அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT