முகப்பு
மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

கடலைமாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சரும நிறம் அதிகரிக்கும்.

Updated On : 15 செப்டம்பர் 2024, 12:00 am IST
கடலைமாவு
பகிர்:

கடலைமாவு:

கடலைமாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சரும நிறம் அதிகரிக்கும். தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், கண்களில் கருவளையங்களைப் போக்கலாம். முகத்தில் எண்ணெய் வழிவதும் தடுக்கப்படும்.

மஞ்சள் தூள், கடலை மாவு கலவை சருமத்தில் தடவி குளித்தால், பொலிவைத் தருவதோடு, நிறத்தையும் அதிகரிக்கும்.

Advertisement

Advertisement

பாலுடன் கடலை மாவைச் சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் செய்து, சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.

முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.

கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள்,மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

முழங்கை, கழுத்துகளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில், தயிர், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் கழித்து கழுவிய பின், நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.