முகப்பு
மகளிர்மணி

பொட்டுக்கடலை ரிப்பன் பகோடா

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைக்க வேண்டும்.

Updated On : 22 செப்டம்பர், 2024 at 5:43 PM
பொட்டுக்கடலை ரிப்பன் பகோடா
பகிர்:
Updated On : 22 செப்டம்பர், 2024 at 5:42 PM

தேவையான பொருள்கள்:

பச்சரிசி, பொட்டுக் கடலை - தலா 150 கிராம் சீரகம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா 1 தேக்கரண்டி உப்பு, எண்ணெய் - சிறிதளவு

Updated On : 22 செப்டம்பர், 2024 at 5:42 PM

செய்முறை:

Advertisement

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைக்க வேண்டும். பொட்டுக் கடலையை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து சூடு ஆறியதும் பொடி செய்ய வேண்டும்.

அரைத்து வைத்துள்ள மாவுடன் பொட்டுக் கடலை மாவு, உப்பு, சீரகம், பெருங்காய்த் தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கைகளில் சிறிதளவு எண்ணெயைத் தொட்டுக் கொண்டு பிசைய வேண்டும்.

வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து தேன் குழல் உழக்கில் ரிப்பன் நாடா தட்டைப் போட்டு, அதில் மாவை போட்டு நீள, நீளமாகப் பிழிந்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.