பேரீச்சம்பழ அப்பம்
அரிசியையும், கோதுமை ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
Updated On : 28 செப்டம்பர், 2024 at 10:18 PM
தேவையான பொருள்கள்:
முந்திரி பருப்பு, பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது)-தலா 10
பச்சரிசி, வெல்லம் - தலா 1 கிண்ணம்
Advertisement
கோதுமை ரவை , தேங்காய் துருவல் - தலா 1/2 கிண்ணம்
ஏலக்காய் - 1 சிட்டிகை
Updated On : 28 செப்டம்பர், 2024 at 10:18 PM
செய்முறை:
அரிசியையும், கோதுமை ரவையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு பேரிச்சம் பழம், வெல்லம், தேங்காய் துருவலை ஒன்றாகச் சேர்த்து அரைத்து பச்சரிசி மாவு கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். ஏலக்காய் பொடி முந்திரி பருப்பு சேர்த்து பணியார மாவு குழியில் நெய் ஊற்றி பிறகு இந்த கலவையை ஊற்றி அப்பங்களாக பொரித்தெடுக்கவும்.