தேவையான பொருள்கள்:
ரஸ்க், முந்திரி- தலா 4
நெய்- 4 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கிண்ணம்
செய்முறை:
ரஸ்கை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைக்கவும். தண்ணீரில் 1 கிண்ணம் சர்க்கரையை சேர்த்து, கரையும் வரை நன்கு காய்ச்சியவுடன் வடிகட்டி மீண்டும் காய்ச்சவும். இப்போது ரஸ்க் தூளை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
4 தேக்கரண்டி நெய்விட்டு நன்கு கரண்டியை சுற்றி வரும் வரை அடிபிடிக்காமல் கிண்டவும். இப்போது சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும். அடிகனமான பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். கேசரி பவுடர் சேர்ப்பது உங்களது விருப்பம்.
வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் அதில் முந்திரி சேர்த்து சிறிது பொன்னிறமாக வறுத்து சேர்க்க ரஸ்க் அல்வா ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.