நூடுல்ஸை தண்ணீரில் போட்டு வேகவைக்கும்போது, அதனுடன் ஒரு மேசைக் கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து வேகவைத்தால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டாது.
தோசைமாவு, இட்லி மாவு ஆகியவை புளித்து விட்டால், ஒரு டம்ளர் பால் சேர்க்கவும், புளிப்புத் தன்மை நீங்கிவிடும்.
குக்கரில் பீட்ரூட் வேகவைத்த நீரை வீணாக்காமல் அதில் ரசம் செய்யலாம். வேக வைத்த நீரும் வீணாகாது. சிவப்பு நிற ரசம் நன்றாக இருக்கும்.
வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் கலந்தால், அது சுவையுடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.