முகப்பு
மகளிர்மணி

குஜராத்தி சுக்ரி

மைதா மாவைச் சலித்துப் பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைச் சிறிது ஊற்றி வெல்லத்தைப் போட்டு இளக விடவும்.

Updated On : 9 பிப்ரவரி, 2025 at 12:01 AM
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2025 at 10:13 PM

தேவையான பொருள்கள்:

மைதாமாவு, நெய், வெல்லம் - தலா 500 கிராம்

பாதாம் பருப்பு - 25 கிராம்

Advertisement

கசகசா , ஏலக்காய்ப் பொடி - தலா 1 தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

Updated On : 8 பிப்ரவரி, 2025 at 10:13 PM

செய்முறை:

மைதா மாவைச் சலித்துப் பொன்னிறமாக வறுத்து ஆறவிடவும். மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து நெய்யைச் சிறிது ஊற்றி வெல்லத்தைப் போட்டு இளக விடவும்.

வறுத்த மைதா மாவு, பாதாம் துண்டுகள், கசகசாவையும், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைக் கலந்து இளக்கிய வெல்லத்தில் போட்டு நன்கு கிளறவும்.

தேங்காய்த் துருவலை வறுத்துச் சேர்த்து மீதியுள்ள நெய்யைச் சேர்த்து நன்கு கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி ஆறிய பின் துண்டு போடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.