கேக் டிப்ஸ்...
கேக் பேக் செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் பேக் செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கி விட வேண்டும்.
Updated On : 11 ஜனவரி, 2025 at 10:51 PM
கேக் பேக் செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் பேக் செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கி விட வேண்டும்.
கேக் பேக் செய்யப்படும்போது, ஓவனை திறந்து மூடக் கூடாது. திறந்து மூடினால் கேக்கின் மென்மைத் தன்மை பாதிக்கப்படும்.
Updated On : 11 ஜனவரி, 2025 at 10:52 PM
புரூட் கேக் தயாரிக்கும்போது, பழங்களில் விதைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்க வேண்டும். முந்திரிப் பருப்பையும் சிறிதாக நறுக்க வேண்டும். பெரியதாக நறுக்கிவிட்டால், கேக் எளிதாக உடைந்துபோகும்.
Advertisement
கேக் தயாரிக்க முட்டையை அடித்து நுரைக்க வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி மைதாவையும் அதனுடன் சேருங்கள். இதனை சேர்த்தால், கேக் கலவை சுவையாக இருக்கும்.