ஸ்வீட் கார்ன் கபாப் 
மகளிர்மணி

ஸ்வீட் கார்ன் கபாப்

ஸ்வீட் கார்னை வேகவைத்து மசித்துகொள்ளவும்.

கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

ஸ்வீட் கார்ன் - 2

உருளை கிழங்கு (வேகவைத்து மசித்தது) - 1 கிண்ணம்

பன்னீர் (துருவியது), வெங்காயம் (நறுக்கியது ) - தலா அரை கிண்ணம்

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி- தேவைகேற்ப

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தனியா தூள், சீரகத் தூள் -அரை தேக்கரண்டி

சோள மாவு - 2 தேக்கரண்டி

உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஸ்வீட் கார்னை வேகவைத்து மசித்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். நறுக்கிய வெங்காயத்தின் மீது சிறிது உப்பு தூவி சிறிதுநேரம் அப்படியே வைக்கவும். ஸ்வீட் கார்ன் கலவையுடன், பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள்,

மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்கவும். உப்பு சேர்த்த வெங்காயத்தை நன்றாக பிழிந்து தண்ணீர் இல்லாமல் இந்த கலவையுடன் கலக்கவும். நன்றாக கலந்த பிறகு இந்த கலவையை கட்லட்டாகத் தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT