மகளிர்மணி

வாழைப்பழ போளி

வாழைப்பழ போளி செய்வது எப்படி?

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

பழுத்த பெரிய அளவிலான வாழைப்

பழம் - 1

மைதாமாவு 1 கிண்ணம்

உப்பு, ஏலக்காய்த்தூள் - தலா 1/4 தேக்கரண்டி

சூஜிரவா, தேங்காய்த்துருவல் - தலா 1/4 கிண்ணம்

பொடித்த வெல்லம் - 3/4 கிண்ணம்

பாதாம், முந்திரி - தலா 10

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதாவுடன் உப்பு, சிறிதளவு எண்ணெய், தேவையான தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்து, 2 மணி நேரம் ஊறவைக்கவும். வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் கூழாக்கி, தனியே வைக்கவும். பாதாம், முந்திரியை கொரகொரப்பாக அரைத்துவைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கிளறி, தேங்காய், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். பொடித்த பாதாம், முந்திரியைச் சேர்த்துக் கிளறி, கடாயின் ஓரத்தில் ஒட்டாமல் வரும்போது அடுப்பை அணைக்கவும்.

பிசைந்துவைத்துள்ள மாவை, சப்பாத்திகளாக இட்டு, நடுவில் வாழைப்பழக் கலவையை சிறிதளவு வைத்து, மூடவும். கையில் லேசாக எண்ணெய்த் தடவிக்கொண்டு, 'ரொட்டி' போல் தட்டவும். இதை, சூடான தோசைக்கல்லில் போட்டு, சிறிதளவு எண்ணெய் விட்டு, இரு பக்கமும் திருப்பிவிட்டு, வேகவைத்து, எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT