பசலைக்கீரை மசாலா 
மகளிர்மணி

பசலைக்கீரை மசாலா

பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

DIN

தேவையான பொருள்கள்:

பசலைக்கீரை- 2 கட்டு (பொடியாக நறுக்கியது)

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

மஞ்சள் தூள், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது- தலா 1 தேக்கரண்டி

தனியா தூள், மிளகாய் தூள்- தலா 1 தேக்கரண்டி

வெங்காயம்- 4 (பொடியாக நறுக்கியது)

தக்காளி- 2 (பொடியாக நறுக்கியது)

பச்சைப் பட்டாணி- கால் கிண்ணம்

பீன்ஸ்- 6 (நறுக்கியது)

கேரட்- 2 (நறுக்கியது)

செய்முறை:

பசலைக்கீரையை நன்கு வேகவைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து முதலில் தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, மசித்த கீரை, பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்கு கிரேவி போல் வந்ததும் இறக்கவும். சத்தான பசலைக்கீரை மசாலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT