முகப்பு
மகளிர்மணி

தேங்காய்ப் பால் ரசம்

ஒரு பாத்திரத்தில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

Updated On : 29 ஜூன், 2025 at 5:14 PM
தேங்காய்ப் பால் ரசம்
பகிர்:
Updated On : 29 ஜூன், 2025 at 5:13 PM

தேவையான பொருள்கள்:

தேங்காய் பால்- 1 கிண்ணம் (முதல்தரம் பால்)

தக்காளி - 1 (நறுக்கியது)

Advertisement

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது- 1தேக்கரண்டி (விருப்பப்படி)

இஞ்சி சிறிய துண்டு -(தேவைப்பட்டால்)

தண்ணீர் -1.5 கிண்ணம்

மிளகு, சீரகம், கடுகு -தலா 1/2 தேக்கரண்டி

எண்ணெய், பெருங்காயம், கறிவேப்பிலை- சிறிதளவு

Updated On : 29 ஜூன், 2025 at 5:13 PM

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தக்காளி நன்கு வெந்து, தக்காளி பழம் மசியும் வரை வேக வைக்கவும். இறுதியாக, தேங்காய் பாலைச் சேர்த்து மிக குறைந்த சூட்டில் அரை நிமிடம் கொதிக்கவிடவேண்டாம். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மிளகு-ஜீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். தேவையான அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.