சில்லி சீஸ் பரோட்டா
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். சிஸைத் துருவிக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்:
பரோட்டா மாவு - அரை கிலோ
சீஸ் - 150 கிராம்
Advertisement
Advertisement
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கியது)
பூண்டு - 4 பல் (தட்டியது)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - 1
கரம் மசாலா, மிளகாய்த்தூள், எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். சிஸைத் துருவிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்த்து துருவிய சீஸையும் போட்டுக் கிளறி இறக்கவும். பரோட்டா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி திரட்டவும். நடுவில் சீஸ் கலவையை வைத்து மூடி ரோல் செய்யவும். இதை தவாவில் போட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.