FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரெட் ஆனியன் பொடிமாஸ்

பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

19 செப்டம்பர் 2026, 10:31 pm IST
பகிர்:

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 10

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

Advertisement

Advertisement

பச்சை மிளகாய் - 3

துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு தேக்

கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு, மிளகாய்த் தூள் - தலா அரை தேக்கரண்டி

உப்பு,  கொத்துமல்லித் தழை - சிறிதளவு

தாளிக்க:

கடலைப்பருப்பு,  எண்ணெய் - தலா ஒரு தேக்கரண்டி

கடுகு,  உளுந்து -தலா அரை தேக்கரண்டி

சீரகம் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.

இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு ஊற்றிக் கிளறி, கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments