FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முருங்கைக்கீரை சூப் பிரிமிக்ஸ்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.

24 அக்டோபர் 2026, 8:48 pm
முருங்கைக்கீரை சூப் பிரிமிக்ஸ்
பகிர்:

தேவையான பொருள்கள்:

முருங்கை இலைப் பொடி - 7 மேசைக் கரண்டி

பாசிப்பருப்புப் பொடி / வறுத்த கடலை மாவு - 4 மேசைக் கரண்டி

Advertisement

Advertisement

கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - 2 மேசைக் கரண்டி

வெங்காயத் தூள் - 4 தேக்கரண்டி

தக்காளிப் பொடி - இரண்டரை தேக்கரண்டி

பூண்டுத் தூள், மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி

கல் உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை கிராம்

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.

தயாரித்த சூப் பிரிமிக்ஸை காற்றுப் புகாத டப்பாவில் அல்லது பையில் சேமிக்கவும். சூப் தயாரிக்க, 2 மேசைக்கரண்டி பிரிமிக்ஸை 200 - 250 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். குறைந்த தீயில் 3-5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறிக்கொண்டே சமைக்கவும். சூப் நன்கு கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சேமிப்புக் காலம்:

அறை வெப்பநிலையில்: 3-4 மாதங்கள்.

குளிர்சாதனப் பெட்டியில்: 5-6 மாதங்கள்.

குறிப்பு: சேமிப்புக் காலம் ஈரப்பதம், தயாரிக்கும் முறை மற்றும் சேமிக்கும் முறையைப் பொறுத்து மாறுபடும்.

-சுனிதா விஸ்வநாத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments