தேவையான பொருள்கள்:
முள்ளங்கி- 300 கிராம்
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு- தலா 60 கிராம்
வெங்காயம்- 5
எண்ணெய்- 300 மில்லி
மிளகாய்த் தூள்- 3 தேக்கரண்டி
கரி மசாலா தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இரு பருப்புகளையும் தனித்தனிப் பாத்திரங்களில் போட்டு தாராளமாக நீர் விட்டு ஊற வையுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றை எடுத்து கரகரப்பார அரைக்கவும். முள்ளங்கியை தோள் சீவி தேங்காயைத் துருவுவதுபோல், துருவுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் இரு பருப்புகளையும், முள்ளங்கி துருவல், வெங்காயம், உப்பு, மிளகாயத் தூள், கரிமசாலா தூள் ஆகியவற்றைப் போட்டு, நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு அதை எலுமிச்சைக் காய் அளவு உருண்டைகளாக உருட்ட வேண்டும். அடுப்பில் இரும்புச் சட்டியை வைத்து, எண்ணெயை ஊற்றுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் முள்ளங்கி சோளா உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வேகவைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.