மகளிர்மணி

முருங்கைக் கீரை சட்னி

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்தவுடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பைப் போட்டு சிவக்க விடவும்.

ஜி.மஞ்சரி

தேவையான பொருள்கள்:

முருங்கைக் கீரை- 2 கிண்ணம்

உளுத்தம் பருப்பு- 4 மேசைக்கரண்டி

கடலைப் பருப்பு- 2 மேசைக்கரண்டி

வெங்காயம்- 2

காய்ந்த மிளகாய்-4

பூண்டு- 5 பல்

புளி, உப்பு, எண்ணெய்- சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்தவுடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பைப் போட்டு சிவக்க விடவும்.

பின்னர் வெங்காயம், மிளகாய், முருங்கைக்கீரையைப் போட்டு மேலும் வதக்கி இறக்கவும். ஆறியதும் அதனுடன் புளி, உப்பு போட்டு விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதின் மேல் கடுகு, பெருங்காயம் தாளித்துகொட்டினால், சட்னி தயார். தேவைப்பட்டால் சிறிய துண்டு தேங்காயை சேர்க்கல்லாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானில் சிறிய வகை விமானம்: மக்களுக்கு அச்சம் வேண்டாம்! - ஆட்சியா் தகவல்

பெண் காவலா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திமுக - காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ பேட்டி

நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா் கைது

கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT