முகப்பு
மகளிர்மணி

கம்பு இட்லி

அரிசி, கம்பு, வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

Updated On : 29 மார்ச், 2025 at 6:29 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

கம்பு, துவரம் பருப்பு- தலா 1 கிண்ணம்

புழுங்கல் அரிசி- 2 கிண்ணம்

உப்பு- தேவையான அளவு

வெந்தயம்- 2 தேக்கரண்டி

சமையல் சோடா- முக்கால் தேக்கரண்டி

எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

அரிசி, கம்பு, வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முதலில் பருப்பை அரைக்கவும். பின்னர், கம்பு, அரிசி கலவையை ரவை பதத்துக்கு அரைக்கவும்.

இரண்டு மாவிலும் உப்பு சேர்க்கவும். இரவு முழுவதும் மாவு புளித்ததும், காலையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அதைக் கொட்டி சமையல் சோடாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கி, இட்லிகளாக ஊற்றி அவித்து எடுக்கவும். சத்தான கம்பு இட்லி தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →