கம்பு பாயசம் 
மகளிர்மணி

கம்பு பாயசம்

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, பாசிப் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தண்ணீரைவிட்டு வேக வைக்க வேண்டும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

கம்புக் குருணை, பாசிப் பருப்பு, நெய் தலா 100 கிராம்

வெல்லம் 300 கிராம்

ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி தலா 1 சிட்டிகை

முந்திரி, திராட்சை 50 கிராம்

செய்முறை:

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, பாசிப் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தண்ணீரைவிட்டு வேக வைக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு, கம்புக் குருணையைப் போட்டு, சிவக்க வறுத்து பாசிப் பருப்புடன் நன்றாகக் குழைய வேகவிட வேண்டும்.

நன்றாக வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடியைச் சேர்த்துக் கலக்கி கீழே இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT