சாதம் குழையாமல் வடிக்க... சமையல் குறிப்புகள்!
சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.
விமலா சடையப்பன்
சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.
தயிர் பச்சடி செய்யும்போது, அதில் பூண்டுப் பற்கள் இரண்டை நசுக்கிப் போட்டால் பச்சடி சுவையாக இருக்கும்.
ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால், தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து, போட்டால் வாசனையாக இருக்கும்.
சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது, அதனுடன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
மழைநீரில் சாதம் செய்தால், சாதம் வெண்மையாக இருக்கும். பருப்பு வேகமாக வெந்துவிடும். சுவையாக நன்றாக இருக்கும்.
வெள்ளரிக்காயை நறுக்கி பஜ்ஜி போட்டால், அதன் சுவையே தனி.