தேவையான பொருள்கள்:
தட்டு வடை - 12
கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - தலா 1/2 கிண்ணம்
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
காரச் சட்னி - 6 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
மாங்காய்த் துருவல், சாட் மசாலாத் தூள் - தலா 3 தேக்கரண்டி
புதினா சட்னி - 6 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கேரட், பீட்ரூட், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கவும். ஆறு தட்டைகளின் மீது கார சட்னியை தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைத்து அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக கேரட், பீட்ரூட் கலவை வைத்து, அதன் மீது வெங்காயம், கொத்தமல்லி இலை, சாட் மசாலாவை சேர்த்து தூவி தட்டுவடை செட்டில் புதினா சட்னியை தடவி, மாங்காய்த் துருவலைப் போடவும். ருசியான தட்டுவடை செட் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.