மகளிர்மணி

மொச்சை பட்டாணி சுண்டல்

மொச்சையை முதல் நாள் இரவு போட்டு மறுநாள் குக்கரில் பச்சை பட்டாணியுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

மகாலட்சுமி சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

மொச்சை - 2 கிண்ணம்

ப.பட்டாணி - கால் கிண்ணம்

வறுத்து அரைத்த சாம்பார் பொடி -1 தேக்கரண்டி

தாளிக்க: கடுகு, உ.பருப்பு, பெருங்காய பொடி

தேங்காய் - தேவையான அளவு

பச்சை மிளகாய், சோம்பு கொரகொரப்பாக அரைத்தது - 1 தேக்கரண்டி

சின்ன மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

மொச்சையை முதல் நாள் இரவு போட்டு மறுநாள் குக்கரில் பச்சை பட்டாணியுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். வெந்ததும் இறக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அது பொரிந்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போடவும். இதனுடன் வெந்த மொச்சை, பட்டாணியை சேர்த்து வறுத்தரைத்த சாம்பார் பொடி, தேங்காய் கொரகொரப்பாக அரைத்ததைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 22 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? தினப்பலன்கள்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

SCROLL FOR NEXT