மகளிர்மணி

சுக்குக் குழம்பு

சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

தினமணி செய்திச் சேவை

நாகஜோதி கிருஷ்ணன்

தேவையான பொருள்கள்:

சுக்கு - ஒரு சிறிய துண்டு

மிளகு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கிண்ணம்

நறுக்கிய தக்காளி - கால் கிண்ணம்

மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்குக் கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: மு.க. ஸ்டாலின்

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...

ரைட்டர் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்?

புறநானூற்றில் ஒரு தம்பி

SCROLL FOR NEXT