சிறுவர்மணி

சிறுவர் பாடல்: பூவைப் போன்றது குழந்தை!

பூவைப் போன்றது பூவேதான் பூவும் குழந்தையும் ஒன்றேதான் குழந்தை என்றால் குழந்தைதான் குழந்தை போன்றெதுவும் இல்லைதான்! கள்ளம் இல்லா உள்ளம்தான் கடவுள் வாழும் இல்லம்தான் பிள்ளை மனமும் வெள்ளைதான் பேசும் தெய்வம

கே.சுப்பிரமணியன்

பூவைப் போன்றது பூவேதான்

பூவும் குழந்தையும் ஒன்றேதான்

குழந்தை என்றால் குழந்தைதான்

குழந்தை போன்றெதுவும் இல்லைதான்!

கள்ளம் இல்லா உள்ளம்தான்

கடவுள் வாழும் இல்லம்தான்

பிள்ளை மனமும் வெள்ளைதான்

பேசும் தெய்வம் பிள்ளைதான்!

அசையும் குழந்தை மழலைதான்

அமுதம் ஊறும் குழலேதான்

இதனில் சிறந்தது யாழேதான்

என்பார் செவிகள் பாழேதான்!

நடக்கும் குழந்தையொரு அன்னம்தான்

நடந்தால் மகிழ்வாள் அன்னைதான்

சிரிக்கும் குழந்தை  கன்னம்தான்

சின்னத் தங்கக் கிண்ணம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT