சிறுவர் பாடல்: மழையே மழையே வா! வா!
மழையே மழையே போ! போ! போ! மற் றொரு நாள் நீ வா! வா! வா! அழையா விருந் தாய் நீ வந் தாய் ஆறு குளங் க ளில் நீர் தந் தாய்! உடைந் தது பாலம் ஊரெங் கும் ஊர் கள் மிதக் குது ஆறெங் கும் அடைந் தது வீதி கள் சேறெங் கு
மழையே மழையே போ! போ! போ!
மற் றொரு நாள் நீ வா! வா! வா!
அழையா விருந் தாய் நீ வந் தாய்
ஆறு குளங் க ளில் நீர் தந் தாய்!
உடைந் தது பாலம் ஊரெங் கும்
ஊர் கள் மிதக் குது ஆறெங் கும்
அடைந் தது வீதி கள் சேறெங் கும்
அணை வெள் ளம் சூழ்ந் தது சீரங் கம்!
உச் சிப் பிள் ளை யார் தப்பி விட் டார்
உயரே இருப் ப தால் அவர் பிழைத் தார்
குச் சும் குடி சை யும் மாடி க ளும்
குபு குபு என்றே மிதக் கி றதே!
பள் ளி கள் விடு முறை மழை யென்று
பதுங் கி னோம் வீட் டிலே மழை யென்று
துள் ளி யாம் ஆடலே மழை யென்று
சோறு யாம் சமைக் கலே மழை யென்று!
விருந் தும் மருந் தும் மூன்றே நாள்
விடா மழை இடி புயல் எத் தனை நாள்
இருந் தும் தொடர்ந் தும் நீ பெய்ய
இன் னொரு நாள் நீ வா மழையே!