முகப்பு
சிறுவர்மணி

சிறுகதை: அ‌ச்ச‌ம் தவி‌ர்!

ஞாயிற் றுக் கி ழமை என் ப தால் சற்று சாவ கா ச மாக எழுந் தி ருக் க லாம் என்று நினைத்த கோகுல் திடீ ரென்று சேகர் மாமா வின் குரல் கேட்டு விழித் துக் கொண் டான். கோகு லின் அம்மா கல் யா ணி யின் அண் ணன் தான் ச

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:42 PM
பகிர்:

ஞாயிற் றுக் கி ழமை என் ப தால் சற்று சாவ கா ச மாக எழுந் தி ருக் க லாம் என்று நினைத்த கோகுல் திடீ ரென்று சேகர் மாமா வின் குரல் கேட்டு விழித் துக் கொண் டான். கோகு லின் அம்மா கல் யா ணி யின் அண் ணன் தான் சேகர். வியா பார விஷ ய மாக வரு ப வர் கோகு லுக் குப் பிடித்த தின் பண் டங் களை வாங்கி வரு வார். அவ னுக் குப் பிடித்த சினி மா வுக் குக் கூட் டிப் போவார். மாமா ஊரி லி ருக் கும் வரை கோகு லுக்கு உற் சா கம் சிற க டிக் கும். மகிழ்ச் சி யாக பொழுது கழி யும்.

÷சென்ற முறை சேகர் மாமா வந் தி ருந்த போது, ""மாமா! அடுத் த முறை வரும் போது எப் ப டி யும் என் னோடு பத்து நாட் க ளா வது இருக்க வேண் டும்'' என்று கோகுல் கேட் டுக் கொண் டான். அவ னது மாமா வும் ""சரி'' என்று சொல் லி யி ருந் தார்.

÷மா மா வைப் பார்க் கும் ஆசை யோடு படுக் கையி லி ருந்து எழுந்து ஓடி வந் த வன் அப் ப டியே திடுக் கிட்டு நின் று விட் டான். அவன் நின் ற தற் குக் கார ணம் மாமா வின் கையி லி ருந்த வெள்ளை நாய்க் குட்டி!

÷சே க ருக்கு நாய் என் றாலே பயம். தெரு வில் போகும் போது தூரத் தில் நாய் எதை யும் கண் டாலே கோகு லுக்கு கை கால் கள் உத றல் எடுக்க ஆரம் பித்து விடும். கடந்த ஒரு வார மாக தெரு மு னை யில் இருக் கும் கடைக் குக் கூட அவன் போவ தில்லை. கார ணம் அந் தக் கடை யின் அரு கில்  கறுப்பு நாய் ஒன்று சுற் றித் திரிந்து கொண் டி ருந் தது.

÷அம்மா கோகு லி டம் மளி கைச் சாமான் ஏதே னும் வாங்கி வரச் சொன் னால், தெரு மு னை யில் இருக் கும் கடையை விட் டு விட்டு, மாற்று வழி யாக அடுத்த தெருவி லி ருந்த கடை யில் தான் பொருட் களை வாங் கிக் கொண்டு வரு வான்.

÷""தெரு மு னையி லி ருக் கும் கடைக் குப் போய் விட்டு வர எதற்கு இவ் வ ளவு நேரம்? '' இரண்டு நாட் கள் முன்பு அம்மா அவ னி டம் கேட் ட போ து தான் நாயைப் பற்றி சொன் னான்.

÷""ஏண்டா கோகுல்... பதி மூணு வய சாச் சுது உனக்கு. உன் னை விட சின்னக் குழந் தைங்க எல் லாம் நாய்க்கு பயப் ப டாம போகுது. உனக்கு மட் டும் என்ன பயம்..?'' என்று அம்மா கல் யாணி கேட் டாள்.

÷""அந்த நாய் என் னைக் கண் ட தும் என் கிட்டே ஓடி வந்து என் னோட காலை முகர்ந்து பார்க் குது. அது என் னைக் கடிச் சு டு மோன்னு பய மா யி ருக் கும்மா. நான் கடைக் குப் போய் வர லேட் டா கு துன்னா இனி நீயோ, அப் பாவோ கடைக் குப் போய் வாங் கிக் கோங்க! '' - கோகுல் அம் மா வி டம் சொல்லி விட் டான்.

÷ஆ னால் இன்று அவனுக்கு ரொம்பப் பிடித்த சேகர் மாமா வீட் டுக் குள் ளேயே நாய்க் குட் டியை எடுத்து வரு வார் என்று அவன் எதிர் பார்க் க வே யில்லை. மாமா வின் கையில் நாய்க் குட் டி யைப் பார்த் த வன், மாமா வி டம் சரி வர பேசக் கூட இல்லை. ஓடிச் சென்று படுக்கை அறைக் குள் சென்று கதவை தாழிட் டுக் கொண் டான்.

÷"நாய் என் றாலே எனக்குப் பயம் என்று தெரிந் தும் மாமா நாய்க் குட் டி யைக் கொண்டு வந்து விட் டாரே! ' என்று அவ னுக்கு கோபம் வந் தது. சேகர் மாமா பல முறை கோகுலை அழைத் தும் அவன் வெளியே வர வில்லை. சிறிது நேரம் கழிந் தது.

÷""கோகுல்... நாய்க் குட் டி யைக் கட் டிப் போட் டுட் டேன்! '' என்று மாமா வெளியி லி ருந்து குரல் கொடுத்த பிற கு தான் அவன் மெது வாக வெளியே வந் தான்.

÷சே கர் மாமா நாய்க் குட் டியை ஒரு சிறிய தோல் பட் டை யால் வராண் டா வில் கட் டிப் போட் டி ருந் தார். அதன் அரு கில் இருந் த கிண் ணத் தில் கொஞ் சம் பாலும் இருந் தது. வெள்ளை நிறத்தி லி ருந்த அந்த நாய்க் குட்டி பாலைக் குடித்து விட்டு, "வக் வக் வக்' என்று குரைத் த படி வராண் டா வையே சுற்றி சுற்றி வந் தது. கோகுல் நாய்க் குட் டி யின் அருகே செல் ல வில்லை. தூரத்தி லி ருந் த ப டியே நாய்க் குட் டி யைப் பார்த் தப்படியே  போனான். இரண்டு நாட் கள் இப் ப டியே கழிந்து விட் டன.

÷ம று நாள் சேகர் மாமா கோகு லி டம் நாய்க் குட் டிக்கு பால் கொண்டு வைக் கும் படி சொன் னார். இரு நாட் கள் நாய்க் குட் டி யைப் பார்த்து பழகி விட் ட தால் கோகு லுக்கு ஓர ளவு தைரி யம் வந் தி ருந் தது. அவன் கிண் ணத் தில் கொஞ் சம் பாலை எடுத் துக் கொண்டு போய் நாய்க் குட் டி யின் அரு கில் வைத் து விட்டு ஓடி வந்து விட் டான்.

÷கோ குல் நாய்க் குட் டியை வேடிக் கைப் பார்த் துக் கொண் டி ருந்த போது, திடீ ரென்று நாய்க் குட் டியை அவிழ்த்து விட் டார் சேகர் மாமா. நாய்க் குட்டி அங் கு மிங் கும் ஓட ஆரம் பித் தது. "வீல்' என்று அல றிய கோகுல் பயந்து போய் நாற்காலி மீது ஏறி நின்று கொண் டான்.

÷""கோகுல்... நாய்க் குட்டி உன்னை ஒன் றும் செய் யாது. நீ பேசா மல் தரை யில் இறங்கி நில்லு! '' என்று அவ னுக்குத் தைரி யம் சொன் னார் சேகர் மாமா. ஆனால், கோகுல் நாற் கா லியை விட்டு கீழே இறங் க வில்லை. ஆனால், அடுத்து வந்த இரண்டு நாட் க ளில் கோகுல் நாய்க் குட்டி மீதான பயம் இன் ன மும் குறைந்து விட் டது. அவன் நாய்க் குட் டி யின் அரு கில் சென்று அதன் முது கில் தட விக் கொடுக் கும் நிலைக்கு வந் தி ருந் தான். அடுத்த சில நாட் க ளில் நாய்க் குட்டி மீதான பயம் சேக ரி டம் கிட் டத் தட்ட நீங் கி விட் டது.

÷ஒரு வாரத் தில் நாய்க் குட்டி ஓர ளவு வளர்ந்து விட் டது. நாய்க் குட் டி யும், கோகு லும் இப் போது ஓடிப் பிடித்து விளை யா டத் தொடங் கி யி ருந் தார் கள். கோகுல் நாய்க் குட் டிக்கு பால், பிஸ் கெட் எல் லாம் தின் னக் கொடுத் தான். தனது நாய்க் குட் டிக்கு "டைகர்' என்று பெய ரும் வைத்து விட் டான். தின மும் பள் ளிக் கூ டம் விட்டு வந் த தும் நாயு டன் விளை யா டி னான். மாலைப் பொழு தில் நாய்க் குட் டியை வெளியே அழைத் துச் சென் றான்.

÷சே கர் மாமா ஊருக் குக் கிளம் பும் நாளும் வந் தது. மாமா கோகுலை அழைத்து,    ""கோகுல்! தெரு மு னைக் கடைக் குப் போய் ஒரு சோப் வாங் கிட்டு வா! '' என்று சொன் னார். மாமா வி டம் காசை வாங் கிய கோகுல் இரண்டு நிமி டத் தில் சோப்பை வாங் கிக் கொண்டு வீடு திரும் பி னான்.

÷""கோகுல்! எப் படி இவ் வ ளவு சீக் கி ரம் சோப் வாங் கிட்டு வந் துட்டே? நீ தெரு மு னை யில் இருக் கிற கடைக் குப் போக மாட் டேன்னு அம்மா சொன் னாளே! இப்போ நீ கடைக் குப் போனப்ப அந்த கறுப்பு நாய் இல் லையா? '' - கோகு லின் மாமா ஒன் றும் அறி யா த வர் போல கேட் டார்.

÷""அம்மா எல் லாத் தை யும் சொல் லிட் டாங் களா மாமா? ! போன வாரம் வரைக் கும் எனக்கு அந்த நாய் மேல பயம் இருந் தது மாமா. ஆனா இப்போ பய மில்லை. இப் ப வும் அந் தக் கறுப்பு நாய் என் பின் னாலே வந் துச்சு. நான் பிஸ் கெட் வாங் கிப் போட் டேன். பிஸ் கெட் டைச் சாப் பிட் டுட்டு அது என் னைப் பார்த்து வாலை ஆட் டிச்சு! '' என்று பதில் சொன் னான் கோகுல்.

÷""தூரத் துல நாயைப் பார்த் தாலே பயந்து ஓடு கிற உனக்கு எப் படி தைரி யம் வந் துச் சு துன்னு தெரி யுதா கோகுல்? '' - மாமா கேட் டார்.

÷"தனக்கு எப் படி அந்த தைரி யம் வந் தது? ' என்று கோகு லுக் கும் ஆச் ச ரி ய மா கத் தான் இருந் தது.

÷""தெரி யலை மாமா. எனக்கு எப் படி அந்த தைரி யம் வந் துச்சு? '' - மாமா வி டம் கேட் டான் கோகுல்.

÷""இங்கே பாரு கோகுல்! நீ நாய்க்கு பயப் ப டு ற தைப் பற் றி அம்மா என் கிட்டே ஃபோன்ல சொன் னாங்க. உன் னோட பயத் தைப் போக் க ணும் தான் நான் ஊரி ல யி ருந்து நாய்க் குட் டியை கொண்டு வந் தேன். நாம எதையோ நினைச் சுப் பயப் ப டு றோம்னா அதுக் குக் கார ணம் அதை விட்டு விலகி நின்று பார்க் கி ற தா ல தான்! இப்போ நாயை அரு கி லேயே பார்த்து பழ கிட் ட தாலே உனக்கு நாய் மீதான பயம் போயி டுச்சு.

÷நீச் சல் கத் துக் க ணும்னா முத லில் தண் ணீ ரைக் கண்டு பயப் ப டக் கூடாது. சைக் கிள் ஓட் டக் கத் தக் க ணும்னா சைக் கி ளைக் கண்டு பயப் ப டக் கூடாது. பள் ளிக் கூட பாடம் கூட அப் ப டித் தான். ஒரு பாடத்தைப் புரிஞ் சுக் க ணும்னா அந் தப் பாடத் தைக் கண்டு பயப் ப டாம நிதா னமா ரெண்டு தடவை படிச் சுப் பார்த் தாலே போதும். அது நமக்கு எளிதா மாறி டும். கோகுல் இந்த உத் தியை நீ வாழ்க்கை முழு வ தும் பயன் ப டுத் துனா எதைக் கண் டும் பயம் தோன் றாது. புரிஞ் சுதா? ! '' - சேகர் மாமா கேட்க, வாழ்க் கை யின் மிகப் பெரிய பாடத் தைக் கற் றுக் கொண் ட வ னாக, ""புரிஞ் சுது மாமா! '' என் றான் கோகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.