முகப்பு
சிறுவர்மணி

கதை கேட்டல் - சிறுவர் பாடல்

குருவி குருவி கதை சொல்லு கூடு கட்டும் கதை சொல்லு! குட்டிப் பூனை கதை சொல்லு குடங்கள் உருட்டும் கதை சொல்லு! தும்பி தும்பி கதை சொல்லு சுற்றிப் பார்த்த கதை சொல்லு! துறுதுறு கிளியே கதை சொல்லு பழத்தைத் துளை

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:34 PM
பகிர்:

குருவி குருவி கதை சொல்லு

கூடு கட்டும் கதை சொல்லு!

குட்டிப் பூனை கதை சொல்லு

குடங்கள் உருட்டும் கதை சொல்லு!

தும்பி தும்பி கதை சொல்லு

சுற்றிப் பார்த்த கதை சொல்லு!

துறுதுறு கிளியே கதை சொல்லு

பழத்தைத் துளைக்கும் கதை சொல்லு!

கோழிக் குஞ்சே கதை சொல்லு

குப்பை மேட்டின் கதை சொல்லு!

குட்டி வாத்தே கதை சொல்லு

குட்டையில் திளைக்கும் கதை சொல்லு!

அணிலே அணிலே கதை சொல்லு

மரங்கள் ஏறும் கதை சொல்லு!

ஆடே ஆடே கதை சொல்லு

காட்டில் அலைந்த கதை சொல்லு!

குள்ளப் பசுவே கதை சொல்லு

பச்சைப் புல்லின் கதை சொல்லு!

குரங்கே குரங்கே கதை சொல்லு

கரணம் போடும் கதை சொல்லு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.