முகப்பு
சிறுவர்மணி

சிறுவர் பாடல்: தேனீ போல வாழ்ந்திடப் பார்!

உயர்ந்த மரக் கிளையிலே தம்பி நீயும் உற்றுப் பார் தேனீக்கள் கட்டி வைத்த தேன்கூடு தொங்குது பார்! ஆயிரமாயிரம் அறைகளிலே அடக்கமாக அமர்வது பார் அண்ணன் தம்பி போலவே அன்பாய் கூடி வாழ்வது பார்! ஒரு பொழுதேனும் வீ

Updated On : 25 டிசம்பர், 2023 at 1:53 PM
பகிர்:

உயர்ந்த மரக் கிளையிலே

தம்பி நீயும் உற்றுப் பார்

தேனீக்கள் கட்டி வைத்த

தேன்கூடு தொங்குது பார்!

ஆயிரமாயிரம் அறைகளிலே

அடக்கமாக அமர்வது பார்

அண்ணன் தம்பி போலவே

அன்பாய் கூடி வாழ்வது பார்!

ஒரு பொழுதேனும் வீணாக்காமல்

பறந்தேதான் போவது பார்

ஓய்வின்றியே ஓடியாடி

சுறுசுறுப்பாக உழைப்பது பார்!

அழுக்கைத் தேடிப் போகாமல்

தூய்மையாக இருக்குது பார்

மலர்களை மட்டும் நாடியே

தேனை மட்டும் சேர்க்குது பார்!

நல்லவை நாடி ஒற்றுமையாக

தேனீ போல வாழ்ந்திடப் பார்

தேனைப் போல உன் வாழ்வும்

நாளெல்லாம் இனிக்கும் பார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.