சிறுவர்மணி

சிறுவர் பாடல்: சேமிப்பு

சின்னச் சின்ன உண்டியல் சிவப்பு நிறம் எனது உண்டியல் மண்ணில் செய்த உண்டியல் மகிழ்ச்சி கொடுக்கும் உண்டியல்! எண்ணி எண்ணி அதனிலே எனக்குக் கிடைக்கும் காசுகள் சிறுகச் சிறுக நானுமே சேர்த்து வருதல் தெரியுமா? க

வளர்கவி

சின்னச் சின்ன உண்டியல்

சிவப்பு நிறம் எனது உண்டியல்

மண்ணில் செய்த உண்டியல்

மகிழ்ச்சி கொடுக்கும் உண்டியல்!

எண்ணி எண்ணி அதனிலே

எனக்குக் கிடைக்கும் காசுகள்

சிறுகச் சிறுக நானுமே

சேர்த்து வருதல் தெரியுமா?

காசு பணமும் சேர்வதால்

கவலை இல்லை எனக்குமே

ஆசைப்பட்ட பொருள்களை

அதனைக் கொண்டு வாங்குவேன்!

எழுதும் பொருட்கள் வாங்குவேன்

இனிப்பு மிட்டாய் வாங்குவேன்

யாரும் உதவி வேண்டினால்

எடுத்துத் தந்து உதவுவேன்!

சின்னஞ் சிறிய வயதிலே

சேர்க்கும் பண்பு தேவையே

சேர்த்த பணத்தைக் கொண்டு நாம்

சேவை செய்ய வேண்டுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT