பாப்பா: குழந்தைப் பாடல்
சின்னச் சிட்டு பாப்பாவாம்! செந்தா ழம்பு பாப்பாவாம்! கன்னங் குழிய சிரிக்குமாம்! கையைப் பிடித்து நடக்குமாம்! பட்டாம் பூச்சி பாப்பாவாம்! பவள மல்லி பாப்பாவாம்! கட்டி முத்தம் கொடுக்குமாம்! கையை வீசி நடக்கு
சின்னச் சிட்டு பாப்பாவாம்!
செந்தா ழம்பு பாப்பாவாம்!
கன்னங் குழிய சிரிக்குமாம்!
கையைப் பிடித்து நடக்குமாம்!
பட்டாம் பூச்சி பாப்பாவாம்!
பவள மல்லி பாப்பாவாம்!
கட்டி முத்தம் கொடுக்குமாம்!
கையை வீசி நடக்குமாம்!
குட்டி மைனா பாப்பாவாம்!
குண்டு மல்லி பாப்பாவாம்!
தத்தித் தத்தி நடக்குமாம்!
தயிரும் சோறும் தின்னுமாம்!