முகப்பு
சிறுவர்மணி

கண்ணான கண்

பார் பார் கண்ணைப் பார்... பார்க்க உதவும் கண்ணைப் பார்! தூசி விழுந்தால் கசக்காமல் பார்... நீரில் கழுவினாலே போய்விடும் பார்! குச்சி கம்பு கொண்டு விளையாடாமல் பார்... விளையாட்டு குதூகலமாய் இருக்குமே பார்!

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:48 PM
பகிர்:

பார் பார் கண்ணைப் பார்...

பார்க்க உதவும் கண்ணைப் பார்!

தூசி விழுந்தால் கசக்காமல் பார்...

நீரில் கழுவினாலே போய்விடும் பார்!

குச்சி கம்பு கொண்டு விளையாடாமல் பார்...

விளையாட்டு குதூகலமாய் இருக்குமே பார்!

கருவேப்பிலை கொத்துமல்லியின் உயிர்ச்சத்தைப் பார்...

சொத்தையென்று தூக்கியெறியாமல் சாப்பிட்டுப் பார்!

பட்டாசினை கவனமாக வெடித்துப் பார்...

பண்டிகை பரவசமாய் இருக்குமே பார்!

கைகால் இழந்தால் செயற்கை பொருத்தலாம் பார்...

கண்பார்வை இழந்தால் செய்ய முடியாதே பார்!

பார்வையிழந்தால் ஏற்படும் துன்பத்தைப் பார்...

வருமுன் காத்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாகும் பார்!

முழு கட்டுரையைப் படிக்க →