என்ன? எங்கே? எப்பொழுது?
ஐந்து வண்ண ஆறு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் இந்த "ஐந்து வண்ண ஆறு' மக்களைக் கவர்ந்து வருகிறது. இது உலகத்தின் அழகான நதியாகவும் கருதப்படுகிறது. மக்கரீனா பகுதியில் இந்த ஆறு அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டு
ஐந்து வண்ண ஆறு
அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் இந்த "ஐந்து வண்ண ஆறு' மக்களைக் கவர்ந்து வருகிறது. இது உலகத்தின் அழகான நதியாகவும் கருதப்படுகிறது. மக்கரீனா பகுதியில் இந்த ஆறு அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த நதியில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல பாசிகள் தோன்றுகின்றன. குறிப்பிட்ட சீசனில் நதியில் சூரிய ஒளிபட்டு அந்த வண்ண பாசிகள் ஐந்து நிறத்தில் ஒளிர்கின்றன.
5000 கிலோ சாக்லெட்
Advertisement
5443 கிலோ எடையுள்ள சாக்லெட்டை சிக்காகோவைச் சேர்ந்த முன்னணி சாக்லேட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராட்சத சாக்லெட், அமெரிக்க நிறுவனம் தயாரித்த 4410 கிலோ சாக்லெட் தயாரிப்பை முறியடித்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
இந்த சாக்லெட்டை உருவாக்க 544 கிலோ பாதாம், 2,495 கிலோ சர்க்கரை, 907 கிலோ பால் பவுடர், 771 கிலோ கோகோ, 635 கிலோ சாக்லெட் திரவம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. "கொஞ்சம் சாப்பிடுங்க, பெரிசா சாதனை பண்ணுங்க' என்கிற வாசகத்துடன் இந்த சாக்லெட் ஊர்வலமாக செல்ல இருக்கிறது.
வரிக்குதிரையாக மாறிய கழுதை
பாலஸ்தீனத்தில் உள்ள குதிரை பாதுகாப்பு அறக்கட்டளை வரிக்குதிரை ஒன்றை மீட்டு வந்தது. அதன் மீது பெயின்ட் மணம் வந்ததை கண்டு அந்த அறக்கட்டளை ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர். சோதனை செய்து பார்த்தில் கழுதைக்கு வரிக்குதிரை போன்று கறுப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசி அதனை
வரிக்குதிரையாக மாற்றியது தெரியவந்தது. ஏற்கெனவே மிருகக்காட்சிசாலை ஒன்றில், வெளிநாட்டில் இருந்து வரிக்குதிரையை இறக்குமதி செய்ய அதிக பணம் செலவாகும் என்ற காரணத்தினால் கழுதைக்கு வர்ணம் அடித்து ஏமாற்றியதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை நட்சத்திரம்
இந்தோனேசியாவைச் சேர்ந்த மேத்யூ என்ற 54 வயது மனிதருக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளாக தனி ஆளாக அடர்ந்த காட்டில் வாழ்ந்து வருகிறார். அந்தக் காட்டில் கிடைக்கும் பனை ஓலை, மட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு கைவினைப் பொருள்களை தயாரித்து அருகில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்து வருகிறார். தனக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு தொழிலை மேம்படுத்த வேண்டும். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்பதே இவரின் குறிக்கோளாகும்.